Director General - NISD

Welcome to the National Institute of Social Development!

NISD has a distinguished tradition of academic, training and research and prides itself in being the nesting ground for qualified and capable individuals in Sri Lankan education system. The excellent support you will receive here will help to transform your lives and prepare you to respond effectively to demands of the world of academic, research, training and the ever-present societal changes. NISD comprises School of Social Work, Training Division and Policy, Research and Publication Division. The School of Social Work offers Postgraduate, Graduate, Diploma and certificate programs in Social Work. These programs are focused on training and preparing professional Social Workers in the country. Besides those Social Work programs, the training division launched pre-service and in-service training programs for the welfare sector personnel in the public, Non-governmental and the voluntary sector.

The scholarly activities with which you will be engaged under the support of NISD may be quite different from those you have been accustomed to and therefore will require greater focus and discipline on your part. Under the wider disciplinary area of Social Sciences, Psychology, Counseling, Social Welfare and Social Development, we offer a variety of programmes and training courses to allow for flexibility with career choices. One of our primary responsibilities is to train generation of young capable social workers, counsellors, care givers and researchers who will be equipped to analyze complex human problems and aid in their solutions. In this regard, NISD is planning to make a significant contribution to local, regional and international development. This responsibility is even more relevant in the increasingly complex and ever-changing local and global environment.

We, therefore, encourage you to utilize our programs and services to help you to obtain answers to the questions you may have or to overcome difficulties you may encounter in the process of make yourself as the quality social workers, counsellors and care givers.

We are happy that you have chosen to be with NISD for a very important chapter in your academic journey and we are ready to support you!

Professor Premakumara de Silva (PhD, Edinburgh)
Director General (Acting)
National Institute of Social Development
(Ministry of Rural Development, Social Security and Community Empowerment)
Liyanagemulla, Seeduwa

தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனத்திற்கு வரவேற்கிறோம்! தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனமானது கல்வி, பயிற்சி மற்றும் ஆராய்ச்சி ஆகியவற்றில் ஒரு தனித்துவமான பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது மற்றும் இலங்கை கல்வி முறைக்கு பங்களிக்கும்; தகுதிவாய்ந்த மற்றும் திறமையான நபர்கள் உருவாகின்ற நிறுவனமாக இருப்பதில் பெருமை கொள்கிறது. இங்கு நீங்கள் பெறும் சிறந்த ஆதரவானது உங்கள் வாழ்க்கையை மாற்றியமைக்கவும், கல்வி, ஆராய்ச்சி, பயிற்சி மற்றும் எப்போதும் நிகழந்துகொண்டிருக்கும் சமூக மாற்றங்கள் போன்ற உலகின் கோரிக்கைகளுக்கு செயற்திறனாக பதில்வினையாற்ற உங்களை தயார்படுத்தவும் உதவும். இந்நிறுவனம் சமூகப் பணிக் கல்லூரி, பயிற்சிப் பிரிவு மற்றும் கொள்கை, ஆய்வு மற்றும் வெளியீட்டுப் பிரிவு ஆகியவற்றை உள்ளடக்கியது. சமூகப் பணிப் கல்லூரியானது சமூகப் பணியில் முதுமாணி, பட்டப்படிப்பு, டிப்ளோமா மற்றும் சான்றிதழ் பாடநெறிகளை வழங்குகிறது. இந் நிகழ்ச்சித்திட்டங்கள் நாட்டில் தொழில்முறை சமூகப் பணியாளர்களைப் பயிற்றுவிப்பதிலும் தயார்படுத்துவதிலும் கவனம் செலுத்துகின்றன. இந்த சமூகப் பணி நிகழ்ச்சித்திட்டங்களுக்கு மேலதிகமாக, இச் சமூகப்பணிக் கல்லூரியானது பொதுத்துறை, அரசு சாரா மற்றும் தன்னார்வத் துறைகளில் நலன்புரித் துறை பணியாளர்களுக்கு கடமைக்கு முன்னரான சேவை மற்றும் கடமையின் போதான பயிற்சித் திட்டங்களைத் தொடங்கியது.

இந்நிறுவனத்தின் உதவியுடன் நீங்கள் ஈடுபடும் கல்விசார் நடவடிக்கைகள், நீங்கள் இதற்கு முன்னர் பழக்கப்பட்டவற்றிலிருந்து மிகவும் வித்தியாசமாக இருக்கலாம், எனவே உங்கள் தரப்பிலிருந்து அதிக கவனமும் ஒழுக்கமும் பேணவேண்டியிருக்கும்;. சமூக அறிவியல், உளவியல், உளவளத்துனை, சமூக நலன்புரி மற்றும் சமூக அபிவிருத்தி ஆகிய பரந்த துறைகளின் கீழ், தொழில் தேர்வுகளில் நெகிழ்வுத்தன்மையை அனுமதிக்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் மற்றும் பயிற்சிநெறிகளை நாங்கள் வழங்குகிறோம். சிக்கலான மனித பிரச்சினைகளை பகுப்பாய்வு செய்து அவற்றின் தீர்வுகளில் உதவக்கூடிய இளம் திறமையான சமூகப் பணியாளர்கள், உளவளத்துணையாளர்கள், பராமரிப்பாளர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களை உருவாக்குவதற்கு பயிற்சி அளிப்பது எங்கள் முதன்மை பொறுப்புகளில் ஒன்றாகும். இது சம்பந்தமாக, இந்நிறுவனம் உள்;ர், வலய மற்றும் சர்வதேச மட்டத்திலான வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்க திட்டமிட்டுள்ளது. அதிகரித்து வரும் சிக்கலான மற்றும் எப்போதும் மாறிவரும் உள்;ர் மற்றும் உலகளாவிய சூழலில் இப் பொறுப்பு இன்னும் பொருத்தமானது.

எனவே, தரமான சமூகப் பணியாளர்கள், உளவளத்துணையாளர்கள் மற்றும் பராமரிப்பாளர்களாக உங்களை உருவாக்குவதில் நீங்கள் சந்திக்கும் சிரமங்களைச் சமாளிக்கவும் உங்களுக்கு இருக்கும் கேள்விகளுக்கான பதில்களைப் பெறவும், எங்கள் திட்டங்கள் மற்றும் சேவைகளைப் பயன்படுத்த நாங்கள் உங்களை ஊக்குவிக்கிறோம்.

உங்கள் கல்விப் பயணத்தில் மிக முக்கியமான ஒரு அத்தியாயத்திற்காக  இந்நிறுவனத்தை நீங்கள் தேர்ந்தெடுத்ததில் நாங்கள்

மகிழ்ச்சியடைகிறோம், மேலும் உங்களுக்கு ஆதரவளிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்!

பேராசிரியர் பிரேமகுமார டி சில்வா (PhD, Edinburgh)
பணிப்பாளர் நாயகம் (பதில் நியமனம்)
தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனம்
கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு
லியனகேமுல்ல, சீதுவ